சிஎஸ்கேவுக்கு ஆரம்பமே தலைவலி… சந்தேகத்தில் 2 முக்கிய வீரர்கள் – சவாலை சமாளிப்பாரா தல தோனி?

சிஎஸ்கேவுக்கு ஆரம்பமே தலைவலி… சந்தேகத்தில் 2 முக்கிய வீரர்கள் – சவாலை சமாளிப்பாரா தல தோனி?

ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் தொடங்கின. முதல் பாதி போட்டிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் நகர்ந்தன. ஆனால் அதற்குப் பின் கொரோனா தான் வேலையைக் காட்டியது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருந்த பயோபபுளையும் மீறி கொரோனா உட்புகுந்தது. எஞ்சிய லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிசிசிஐ மாற்றியது. அதன்படி செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அங்கே மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன.

சிஎஸ்கேவுக்கு ஆரம்பமே தலைவலி… சந்தேகத்தில் 2 முக்கிய வீரர்கள் – சவாலை சமாளிப்பாரா தல தோனி?
சிஎஸ்கேவுக்கு ஆரம்பமே தலைவலி… சந்தேகத்தில் 2 முக்கிய வீரர்கள் – சவாலை சமாளிப்பாரா தல தோனி?

முதல் போட்டியே ரசிகர்களுக்கு ட்ரீட் தான். ஆம் ஐபிஎல் ஆரம்பித்ததிலிருந்து பரம வைரிகளாகப் பார்க்கப்படும் சென்னை அணிக்கும் மும்பைக்கு அணிக்குமே ரகளையான ஆட்டத்துடன் இரண்டாம் பாதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக மும்பை மற்றும் சென்னை அணி வீரர்கள் துபாய் வந்தடைந்தனர். அவர்கள் கடந்த ஒரு வாரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஒருசில வீரர்கள் இன்னமும் துபாய் வந்தடையவில்லை. அவர்களில் முக்கியமானவர்கள் சிஎஸ்கே அணியின் கட்டப்பா டுபிளெஸ்சிஸும் சுட்டிக்குழந்தை சாம் கரணும் தான். இவர்கள் இருவரும் துபாய் வந்தாலும் முதல் போட்டியில் கலந்துகொள்வது சந்தேகமே.

கரீபியன் லீக்கில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக டுபிளெஸ்சிஸ் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் டூபிளெசிஸுக்கு தலையில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக மயக்க நிலைக்குச் சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமாகிவிட்டார். ஆனாலும் அவரல் கடந்த இரு போட்டிகளாக பங்கேற்க முடியவில்லை. அவர் துபாய் வந்த பிறகே உடல்நிலையைக் கவனித்து முதல் ஆட்டத்தில் களமிறக்கலாமா வேண்டாமா என்பதை சிஎஸ்கே மருத்துவக் குழு உறுதிப்படுத்தும் என்கின்றனர்.

சிஎஸ்கேவுக்கு ஆரம்பமே தலைவலி… சந்தேகத்தில் 2 முக்கிய வீரர்கள் – சவாலை சமாளிப்பாரா தல தோனி?

நாளை அவர் துபாய் வருகிறார். இவருக்குப் பதிலாக உத்தப்பா, ஜெகதீசன், மொயன் அலி ஆகியோரில் யாரெனும் ஒருவர் களமிறக்கப்படலாம். சிஎஸ்கே அணியின் மிக மிக முக்கியமான வீரர் என்றால் சுட்டிக்குழந்தை சாம் கரண் தான். முக்கியமான தருணங்களில் அணிக்கு விக்கெட் எடுத்துக்கொடுப்பது, அதேபோல பேட்டிங்கிலும் மேஜிக் நிகழ்த்துவது என சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் தூணாக விளங்குகிறார்.

சிஎஸ்கேவுக்கு ஆரம்பமே தலைவலி… சந்தேகத்தில் 2 முக்கிய வீரர்கள் – சவாலை சமாளிப்பாரா தல தோனி?

இவர் சமீபத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிக்களுக்கிடையேயான டெஸ்ட் போட்டி அணியில் இடம்பெற்றிருந்தார். கடைசி டெஸ்ட் போட்டி ரத்தான போதிலும் சாம் கரண் இன்னும் துபாய் வந்துசேரவில்லை. 19ஆம் தேதிக்குள் அவர் வந்தாலும் துபாயில் ஆறு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தே ஆக வேண்டும் என்பதால் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிகிறது.