#IPL2021: 3வது வெற்றியை பதிவு செய்தது கோலியின் பெங்களூரு அணி!!

 

#IPL2021: 3வது வெற்றியை பதிவு செய்தது கோலியின் பெங்களூரு அணி!!

நடப்பு ஐபிஎல் தொடரின் 10வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். ஆட்டத்தை தொடங்கிய பெங்களூருக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது,கேப்டன் கோலி 5 ரன்களிலும் அடுத்துவந்த ரஜத் படிதர் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து படிக்கல் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். படிக்கல் நிதானமாக ஆட மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். ரன் அடிக்க முடியாமல் திணறிய படிகள் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் அதிரடி மன்னன் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் சேர்ந்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 78 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் சென்னை மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். அதிரடியாக ஆடிய டிவிலியர்ஸ் 34 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 76 ரன்கள் குவித்து 20 வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Image

205 என்ற கடினமான இலக்கிய தொடக்க கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களம் இறங்கினர். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 9 பந்துகளில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி தனது பங்கிற்கு அதிரடியாக ஆடி 25 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா அணி பவர்பிளே முடிவில் 57 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.சஹால் பந்துவீச்சில் நிதிஷ் ராணா 18 ரன்னிலும் தினேஷ் கார்த்திக் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.பின் கேப்டன் மோர்கன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தனர்.நிதானமாக ஆடிய மோர்கன் 29 ரன்னில் , ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் வீழ்ந்தார்.அதை தொடர்ந்து அதிரடி வீரர் ரஸல் வந்தார்.இருப்பனும் வெற்றிக்கு போதிய ரன் அடிக்க இயலவில்லை.20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.இதன் மூலம் பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இந்த தொடரில் பெங்களூரு பெற்ற 3வது வெற்றி ஆகும். இதன் மூலம் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது.