“அது தான் என்னோட பலம்” – வழக்கம் போல பஞ்ச் அடித்த தோனி!

 

“அது தான் என்னோட பலம்” – வழக்கம் போல பஞ்ச் அடித்த தோனி!

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியும் ராஜஸ்தான் அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டி சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு மிகவும் ஸ்பெஷலான போட்டி. நேற்று அவர் சிஎஸ்கே கேப்டனாக 200ஆவது போட்டியில் விளையாடினார்.

“அது தான் என்னோட பலம்” – வழக்கம் போல பஞ்ச் அடித்த தோனி!

ஐபிஎல் ஆரம்பித்ததிலிருந்து சிஎஸ்கே அணிக்காக கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். இதுவரை சிஎஸ்கேவுக்காக 201 போட்டிகளில் ஆடியிருக்கிறார். இதில் சாம்பியன்ஸ் லீக்கின் 24 போட்டிகளும் அடக்கம். ஒரேயொரு போட்டி தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளிலும் சிஎஸ்கே கேப்டனாக இருந்துள்ளார். இதனால் தோனியின் ஆட்டத்தை ரசிக்க ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தோனியின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

“அது தான் என்னோட பலம்” – வழக்கம் போல பஞ்ச் அடித்த தோனி!

மிடில் ஓவர்களில் மொயின் அலி, ஜடேஜாவின் சுழல் மேஜிக்கால் 45 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. இருப்பினும், கடந்த இரு போட்டிகளாக தோனியின் ஃபார்ம் குறித்து கேள்விகள் எழுந்தன. நேற்றைய போட்டியில் முதல் ஆறு பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரின் டாட் பந்துகளால் அணியின் ரன்ரேட் வெகுவாகக் குறைந்தது.

ஆட்டத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சியில் வர்ணனையாளர் ஹர்ஸா போக்லே தோனியிடம் அவரின் ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸ் குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு வழக்கம் போல தனக்கே உரித்தான பாணியில் பதில் சொல்லி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அப்போது பேசிய அவர், “நான் 24 வயதில் இருக்கும்போது மிகச் சிறப்பாக விளையாடுவேன் என்று யாருக்கும் உறுதியளிக்கவில்லை.

எனக்கு 40 வயதாகிறது. இப்போதும் நான் நன்றாக விளையாடுவேன் என உத்தரவாதம் கொடுக்கவில்லை. ஆனால் மக்கள் என்னை கை காட்டி இவருக்கு ஃபிட்னஸ் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அது தான் என்னுடைய பலம்” என்றார். தற்போது இந்த வீடியோவைப் பகிர்ந்து தோனி ரசிகர்கள் இணையதளத்தைத் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.