களைகட்ட போகும் ஐபிஎல் திருவிழா… மீண்டும் ரசிகர்களுக்கு அனுமதி!

 

களைகட்ட போகும் ஐபிஎல் திருவிழா… மீண்டும் ரசிகர்களுக்கு அனுமதி!

கொரோனா பரவலை மீறி கடந்த ஆண்டு துபாயில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடித்தது. இம்முறையும் பிசிசிஐக்கு கடும் சவால் காத்திருந்தது. மார்ச் மாதம் வரை அமைதியாக இருந்த கொரோனா, ஐபிஎல் தொடங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து இரண்டாம் அலையாக வேகமெடுத்தது. இதனால் வீரர்கள் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதியில்லை.

களைகட்ட போகும் ஐபிஎல் திருவிழா… மீண்டும் ரசிகர்களுக்கு அனுமதி!

வெற்றிகரமாக பாதி போட்டிகள் நடந்துமுடிந்திருந்த நிலையில் கொரோனா தனது வேலையைக் காட்டியது. அதீத கட்டுப்பாடுகளையும் மீறி பயோ பபுளுக்குள்ளும் கொரோனா நுழைந்தது. வருண் சக்கரவர்த்திக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் எனவும் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.

IPL 2020: Don't you dare break Covid-19 protocols, BCCI warns players |  Business Standard News

அதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்து இரண்டாம் பாதியின் முதல் போட்டியிலேயே (செப்.19) பரமவைரிகளான மும்பையும் சென்னையும் மோதுகின்றன. இச்சூழலில் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு ரசிகர்கள் போட்டியைப் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. www.iplt20.com மற்றும் Platinumlist.net ஆகிய இணையதளங்களில் டிக்கெட்களைப் பெற முடியும்.