பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ

 

பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ

சென்ற ஆண்டு கொரோனா தொற்றால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் செப்டம்பரில் துபாயில் நடத்தப்பட்டது. இச்சூழலில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. அடுத்த நாளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பையில் மோதுகின்ன்றன. இச்சூழலில் டெல்லி அணியின் முக்கிய வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக, கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணாவுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் சென்னை உட்பட 6 மைதானங்களில் நடைபெறும் என்றும் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டுவருவதாகவும் பிசிசிஐ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.