கொல்கத்தா அணி மீண்டும் சொதப்பல்,டெல்லி அணிக்கு அபார வெற்றி.

 

கொல்கத்தா அணி மீண்டும் சொதப்பல்,டெல்லி அணிக்கு அபார வெற்றி.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திலுள்ள டெல்லி கேப்பிடல் மற்றும் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

Image

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நிதிஷ் ராணா 15 ரன்களிலும்,சுப்மன் கில் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய திரிபாதி 19 ரன்களிலும் , கேப்டன் மோர்கன் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பிறகு வந்த அதிரடி ஆட்டக்காரர் ரசல் மட்டும் சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 45 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. டெல்லி தல தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல் மற்றும் லலித் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்திகளை அசத்தினார்.

Image

டெல்லி மைதானத்தில் 155 என்ற எளிய இலக்கை துரத்திய டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. முதல் ஓவரிலேயே அற்புதமாக ஆடிய பிரித்வி சா , சிவம் மவியின் 6 பந்துகளில் 6 பவுண்டரிகளை விரட்டினார். பவர் பிளே வில் விக்கெட் இழப்பின்றி டெல்லி அணி 67 ரன்களை குவித்தது. தொடர்ந்து அசத்திய பிரீத்தி விசா 18 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார்.
அற்புதமாக ஆடிட வந்த இந்த ஜோடியை ஒருவழியாக பேட் கம்மின்ஸ் பிரித்தார் , நிதானமாக ஆடி வந்த ஷிகர் தவானை 46 ரன்களில் எல்.பி.டபிள்யூ மூலமும்,சிறப்பாக ஆடிய ப்ரிதிவி ஷாவை 82 ரன்களில் ஷார்ட் பாலின் மூலமும் ஆட்டமிழக்கச் செய்தார் பேட் கம்மின்ஸ். அதன்பிறகு களம் இறங்கிய ரிசப் பன்ட்,ப்ரிதிவி ஷாவுடன் சேர்ந்து வெற்றியை உறுதி செய்தார்.16.3 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்களை இழந்து 156 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.