சிஎஸ்கே அணியில் மற்றொரு வீரருக்கு கொரோனா!

 

சிஎஸ்கே அணியில் மற்றொரு வீரருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். அதிகரித்து வரும் கரோனா அச்சம் காரணமாக, டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர், சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் ஒரு உதவியாளருக்கும், ஐதராபாத் அணியில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

CSK batting coach Mike Hussey(Twitter)

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹசிக்கும் தற்போது கொரோ தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.