வருகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்… களைகட்ட போகும் ஐபிஎல் திருவிழா!

 

வருகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்… களைகட்ட போகும் ஐபிஎல் திருவிழா!

கொரோனா பரவலை மீறி கடந்த ஆண்டு துபாயில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடித்தது. இம்முறையும் பிசிசிஐக்கு கடும் சவால் காத்திருந்தது. மார்ச் மாதம் வரை அமைதியாக இருந்த கொரோனா, ஐபிஎல் தொடங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து இரண்டாம் அலை வேகமெடுத்தது. இதனால் வீரர்கள் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வருகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்… களைகட்ட போகும் ஐபிஎல் திருவிழா!
வருகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்… களைகட்ட போகும் ஐபிஎல் திருவிழா!

வெற்றிகரமாக பாதி போட்டிகள் நடந்துமுடிந்திருந்த நிலையில் கொரோனா தனது வேலையைக் காட்டியது. அதீத கட்டுப்பாடுகளையும் மீறி பயோ பபுளுக்குள்ளும் கொரோனா நுழைந்தது. வருண் சக்கரவர்த்திக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் எனவும் பிசிசிஐ அறிவித்தது.

வருகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்… களைகட்ட போகும் ஐபிஎல் திருவிழா!

இந்தப் போட்டிகள் நடைபெறக் கூடிய தேதிகளில் இங்கிலாந்து அணி வங்கதேசத்துடன் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடவிருந்தது. இதனால் மாற்றியமைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் சிஎஸ்கே, டெல்லி உள்ளிட்ட ஐபிஎல் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதற்காக இங்கிலாந்து மற்றும் வங்கதேச வாரியங்களிடம் பிசிசிஐ சார்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் 2023ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் உலகக்கோப்பை டி20 போட்டிகளும் நடைபெறுவதால் அங்கு தங்கள் வீரர்கள் ஆடினால் முன் ஆயத்தமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்தும் ஒப்புக்கொண்டது. இதனால் பல அணிகளுக்குத் தலைவலியாக இருந்த மிகப்பெரிய பிரச்சினையை பிசிசிஐ அசால்டாக முடித்துவைத்துவிட்டது.