அடுத்தடுத்து இரண்டு விக்கெட்! கடைசியில் வந்து கைக்கொடுப்பாரா ‘கூல்’கேப்டன்

 

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்! கடைசியில் வந்து கைக்கொடுப்பாரா ‘கூல்’கேப்டன்

தோனி வெறியர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்த ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் போட்டி தொடங்கியது. 3 முறை ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை அணி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே வீரர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு ஆட்டத்தை தொடங்கி விறுவிறுப்பாக விளையாடியது. அடுத்தடுத்து விழுந்த சிறப்பான கேட்சினால் மும்பை அணி 162 ரன்களை பெற்று ஆட்டமிழந்தது.

Image

அடுத்து களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், முரளி விஜயும் மும்பை இந்தியன்ஸை சமாளிக்க களமிறங்கினர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி மற்றும் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ரன்களை குவித்து, அனைவரையும் அசரவைத்து கோப்பையை வாங்க உறுதுணையாக இருந்தவர் வாட்சன். இதுவே இவர் இன்றைய ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அனைவரின் எதிர்ப்பார்ப்பையும் துவம்சம் செய்து நான்கே ரன்னில் ஆட்டமிழந்தார் வாட்சன். அடுத்த தோல்வியாக தமிழக வீரர் முரளி விஜய் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து சிஎஸ்கே அணி வீரர்களை சோகத்தில் ஆழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய ராயுடு, டூ பிளசஸ் ஆகியோர் விட்ட விக்கெட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக சிறப்பாக விளையாண்டு வருகிறார்.