கடைசி பந்தில் த்ரில் வெற்றி! பெங்களூரு அணியை தோற்கடித்த பஞ்சாப்…

 

கடைசி பந்தில் த்ரில் வெற்றி! பெங்களூரு அணியை தோற்கடித்த பஞ்சாப்…

ஐபிஎல் தொடரின் 31 ஆவது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் மற்றும் பின்ச் களமிறங்கினர். படிக்கல் 18 ரன்களிலும் மற்றும் பின்ச் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்த கேப்டன் விராட் கோலி 48 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் மாரிஸ் 8 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

கடைசி பந்தில் த்ரில் வெற்றி! பெங்களூரு அணியை தோற்கடித்த பஞ்சாப்…

172 என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் ராகுல் மற்றும் அகர்வால் களமிறங்கினர்.அதிரடி துவக்கம் தந்த இந்த ஜோடி 8 ஓவர்களில் 78 ரன்கள் குவித்தது. அகர்வால் 45 ரன்களில் ஆட்டமிழக்க பிறகு கிறிஸ் கெயில் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். கடைசி ஓவரில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கெயில் ரன் அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு உண்டானது , ஆனால் கடைசி பந்தில் பூரன் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தார். கேஎல் ராகுல் 61 ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் தொடர் தோல்விகளை சந்தித்த பஞ்சாபின் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.