தனி ஒருவனாக போராடிய திரிபாதி! கடைசி நேர ட்விஸ்ட்… கொல்கத்தா அசத்தல் வெற்றி!!

 

தனி ஒருவனாக போராடிய திரிபாதி! கடைசி நேர ட்விஸ்ட்… கொல்கத்தா அசத்தல் வெற்றி!!

இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடி, இரண்டில் மட்டும் வெற்றியும் மூன்றில் தோல்வியும் கண்டிருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் ஆடி, 2-ல் வென்று 2-ல் தோற்றிருக்கிறது. இதனால் புள்ளி பட்டியலில் முன்னேற இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

Image

இன்று டாஸ் வின் செய்த கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக திரிபாதியும், சுக்மந்த் கில்லும் களிமிறங்கினர். அதிகபட்சமாக திரிபாதி 81 ரன்கள் குவித்தார். கில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதேபோல் கொல்கத்தா அணியின் கிங்காக வலம்வந்த ரசல் இரண்டே ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கும், ட்ரீம் லெவன் நண்பர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில், ஆல் அவுட்டில் 167 ரன்களை கொல்கத்தா அணி எடுத்தது. சென்னை அணியின் கேப்டன் தோனி 4 கேட்ச் பிடித்து, மொத்தம் 5 பேரை ஆட்டமிழக்க செய்தார்.

அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக டூ பிளசிஸும், வாட்சனும் களமிறங்கினர். சென்னை அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்பட்ட டூ பிளசிஸ், 17 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை கவலையடைய செய்தார். வாட்சன் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய தோனியும், ஜாதவும் எதிர்பார்த்த அளவு விளையாடாமல் தோல்வியை தழுவினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 157 ரன்கள் எடுத்து கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவியது.