ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர் ஆக பதஞ்சலி முயற்சி!

 

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர் ஆக பதஞ்சலி முயற்சி!

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர் விவோ வெளியேறியுள்ள நிலையில் அந்த இடத்துக்கு வர பதஞ்சலி முயற்சி செய்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீனா நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயரிழந்தனர். இதைத் தொடர்ந்து சீன ஆப் களுக்கு இந்தியா தடைவிதித்து வருகிறது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பா.ஜ.க-வினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர் ஆக பதஞ்சலி முயற்சி!
இந்த நிலையில் அமித்ஷாவின் மகன் செயலாளராக இருக்கும் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டியில் மட்டும் சீன நிறுவனம் விவோ இருக்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகுவதாக விவோ மொபைல் போன் நிறுவனம் அறிவித்தது.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர் ஆக பதஞ்சலி முயற்சி!
இந்த நிலையில் டைட்டில் ஸ்பான்சராக சேர பதஞ்சலி விருப்பம் தொிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எடுக்க பதஞ்சலி யோசித்து வருகிறது. இதன் மூலம் பதஞ்சலி பொருட்கள் உலக அளவில் பிரபலம் அடையும்” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர் ஆக பதஞ்சலி முயற்சி!
இது தொடர்பாக முறையான விண்ணப்பத்தை பிசிசிஐ-யிடம் வழங்க பதஞ்சலி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே போல், ஜியோ, அமேசான், டாடா குழுமம், ட்ரீம்11, அதானி குழுமம், கல்வி தொடர்பான ஸ்டார்ட்அப் ஆன பைஜூஸ் உள்ளிட்டவையும் ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்க்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.