வெறித்தனமாக விளையாடிய ஐதரபாத் அணி! மும்பை இந்தியன்சை வீழ்த்தி பிளே ஆஃப்க்கு முன்னேற்றம்

 

வெறித்தனமாக விளையாடிய ஐதரபாத் அணி! மும்பை இந்தியன்சை வீழ்த்தி பிளே ஆஃப்க்கு முன்னேற்றம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் 56வது ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் , ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முடியும் என்பதால் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த சில போட்டிகளில் காயத்தால் ஆடாமல் இருந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா குணமடைந்ததையடுத்து களமிறங்கினார். மும்பை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதால் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து மாற்று வீரர்களை பரிசோதனை செய்ய முடிவெடுத்து மூன்று மாற்றம் செய்தனர். அதன்படி, மும்பை அணியின் பிரதான பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, மாற்று வீரர்களுக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

வெறித்தனமாக விளையாடிய ஐதரபாத் அணி! மும்பை இந்தியன்சை வீழ்த்தி பிளே ஆஃப்க்கு முன்னேற்றம்

மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் டி காக் களமிறங்கினார்.ரோகித் 4 ரன்களிலும் , டி காக் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிசான் முறையே 36 மற்றும் 33 ரன்கள் சேர்த்தனர். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பொல்லார்டு 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை குவித்தது.

150 என்ற இலக்குடன் துவங்கிய சன்ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா ஆகியோர் இறங்கினர். அதிரடி விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். 17.1 ஓவர் முடிவில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, விக்கெட் இழப்பின்றி 151 ரன்களை எடுத்து அபார வெற்றிப்பெற்றது. வார்னர் 85 ரன்களும், சாகா 58 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐதரபாத் அணி, புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.