ஐபிஎல்: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

 

ஐபிஎல்: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 43வது ஆட்டத்தில் , கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும்,வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. பிளேஆஃப் செல்வதற்கு இந்த போட்டியின் வெற்றி இரு அணிகளுக்குமே முக்கியம் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கின.

டாஸ் வென்ற கிங்ஸ் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினார். மந்தீப் சிங் 17 ரன்களிலும், ராகுல் 27 ரன்களிலும், கெய்ல் 20 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்ததால் அதிரடியாக ஆட முடியவில்லை. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்தது.அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல்: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோ மற்றும் வார்னர் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி பவர் பிளேவில் 52 ரன்களை திரட்டியது. வார்னர் 20 பந்துகளில் 35 ரன்களிலும் , பேர்ஸ்டோ 19 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே 15 ரன்களிலும், தமிழக வீரர் விஜய் சங்கர் 26 ரன்களிலும் ஆட்டமிழக்க ,ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில் 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஐதரபாத் அணி 115
ரன்கள் மட்டுமே எடுத்ததால் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மேலும் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் சன்ரைசர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 6-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டதோடு ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பையும் கடினமாக்கியுள்ளது.