ஆட்டம்போடும் ‘ஐபேக்’ – அலறும் திமுக நிர்வாகிகள்

 

ஆட்டம்போடும் ‘ஐபேக்’ – அலறும் திமுக நிர்வாகிகள்

திமுக தலைமை இடம் அறிவாலயமா இல்லை’ ஐபேக்’ தலைமையகமா? என கொந்தளிக்கிறார்கள் அந்த கட்சியின் நிர்வாகிகள். அந்தளவிற்கு திமுகவின் அத்தனை செயல்பாடுகளிலும் ஐபேக்கின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனால் நொந்து நூலாகிவரும் கட்சி நிர்வாகிகள்,’’ ஒவ்வொரு தேர்தலின்போதும் நம்மை காவு வாங்க ஒவ்வொரு விஷயம் கிளம்பும். இந்தமுறை அது ஐபேக்கா இருந்தால் ஆச்சரியப்பட எதுவுமில்லை’’ என அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.

ஆட்டம்போடும் ‘ஐபேக்’ – அலறும் திமுக நிர்வாகிகள்


நிர்வாகிகளின் இத்தகைய புலம்பலுக்கு காரணங்கள் நிறையவே உண்டு.
தொடர்ந்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய திமுக வரும் 2021 தேர்தலில் வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த முறையும் வெற்றி கிடைக்காவிட்டால் கட்சி காணாமல் போய்விடும் என்பது சின்னக் குழந்தைக்கு கூட தெரிந்த ரகசியம்தான். எனவே எப்படியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு தேர்தல் வியூக நிபுணராக தன்னை சித்தரித்துக் கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் சுமார் 350 கோடி ரூபாய் செலவில் ஒப்பந்தம் போட்டது திமுக தலைமை.

ஆட்டம்போடும் ‘ஐபேக்’ – அலறும் திமுக நிர்வாகிகள்


திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ஏற்பாட்டில் நடந்த இந்த காரியத்தை பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் ரசிக்கவில்லை. ‘’10 வருஷமா கட்சிக்கு செலவழிச்சி எல்லாரும் இங்கே ஓட்டாண்டியா இருக்கிறப்போ, தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் பற்றி எதுவும் தெரியாத ஒரு வடநாட்டுக்காரருக்கு இப்படி கோடி கோடியா அள்ளிக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?’’ என பலரும் கொதித்தார்கள். மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இதை வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார். ஆனாலும் ஐபேக்கின் ஆதிக்கம் தொடரவே செய்தது.
கொரோனா காலத்தில் பாதுகாப்பு கருதி முடிந்தவரை அனைவரையும் வீடுகளுக்குள்ளேயே இருக்கச் சொன்னது அரசு. ஆனால் ஐபேக்கின் திட்டப்படி தமிழகம் முழுவதும் ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்தை செயல்படுத்தியது திமுக. இதன்மூலம் கிளைச் செயலாளர்களில் இருந்து மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆளாளுக்கு கைக்காசை செலவழித்து நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் பொருள் மற்றும் கால விரயத்துடன் ஜெ.அன்பழகன் போல உயிர்பலி ஏற்பட்டதுதான் மிச்சம். மற்றபடி எதிர்பார்த்த எந்த ரிசல்ட்டும் கிடைக்கவில்லை.

ஆட்டம்போடும் ‘ஐபேக்’ – அலறும் திமுக நிர்வாகிகள்


ஒன்றிணைவோம் வா ஏற்படுத்திய சோர்வு அடங்குவதற்குள், ‘எல்லோரும் நம்முடன்’ என்கிற பெயரில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை ஐபேக் ஆலோசனையில் திமுக தொடங்க, நிர்வாகிகள் மத்தியில் உச்சக்கட்ட கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
‘’ புள்ளிவிபர புலிகளிடம் கட்சித் தலைமை சிக்கிக்கொண்டுள்ளது. கள நிலவரம் தெரியாத இவர்கள் செயல்படுத்தும் திட்டங்களால் கட்சி நிர்வாகிகள் சோர்வும், கொதிப்பும் அடைந்திருக்கின்றனர். தொடர்ச்சியா நிகழ்ச்சிகளை நடத்தச் சொல்றாங்க. உறுப்பினர் சேர்க்கை என்றவுடன் ஆளாளுக்கு வரிசையில் வந்து நிற்கிறதா நினைச்சிக்கிறாங்க. ஆனால் ஒரு பத்து பேரை திரட்டி உறுப்பினராக்குவதற்கே நாங்க படாத பாடு பட வேண்டியிருக்குது. செலவும் தாறுமாறா ஆகுது. தலைமையிலிருந்து நயா பைசா தர்றதில்லை. எங்ககிட்ட நோட்டு அடிக்கும் மெஷினா இருக்குது…இவங்க சொல்ற நேரத்திற்கெல்லாம் லட்சம், லட்சமா செலவழிக்க?

ஆட்டம்போடும் ‘ஐபேக்’ – அலறும் திமுக நிர்வாகிகள்

இதுபோக இந்த தொகுதியில் உங்களுக்கு சீட் கிடைக்க ஏற்பாடு செஞ்சிருக்கோம். அதுக்கு இவ்வளவு செலவாகும்ணு ஐபேக் ஆட்கள் வெளிப்படையா பேரம் பேச ஆரம்பிச்சிருக்காங்க. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன கூத்து பண்ணப் போறாங்களோ! ஓன்று மட்டும் நிச்சயம் தேர்தலுக்குள்ள பெரும்பாலான நிர்வாகிகள் முழுமையா சோர்ந்து போயிடப்போறாங்க. இது எதிரணிக்குத்தான் சாதகமா அமையப் போகுது’’ என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.