ஸ்டாலினுக்கு டாடா காட்டிய பிரசாந்த் கிஷோர்… அவ்ளோ தான் முடிஞ்சது எல்லாம்!

 

ஸ்டாலினுக்கு டாடா காட்டிய பிரசாந்த் கிஷோர்… அவ்ளோ தான் முடிஞ்சது எல்லாம்!

இந்தியாவின் நவீன சாணக்கியன் என்று சொல்லப்படுகிறார் தேர்தல் உத்தி ஆலோசகரான பிரசாந்த் கிஷோர். ஆனால் அவருக்கு அவ்வளவு சீன் இல்லை; ஜெயிக்கும் குதிரைகளைப் பார்த்து பந்தயம் கட்டுகிறார் என்று ஒரு தரப்பு விமர்சனத்தை முன்வைக்கிறது. அந்தத் தரப்பு கூட பிகேவுடன் ஒப்பந்தம் போட ரகசியமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது தான் நகைமுரண். இம்முறை இரு மாநிலங்களுக்கு பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஸ்டாலினுக்கு டாடா காட்டிய பிரசாந்த் கிஷோர்… அவ்ளோ தான் முடிஞ்சது எல்லாம்!

ஒன்று தமிழ்நாட்டில் ஸ்டாலினுடன். மற்றொன்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடன். இதுநாள் வரை கட்சித் தொண்டர்களை மட்டுமே நம்பியிருந்த திமுக முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒரு ஆலோசகரை நியமித்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் 2016 தேர்தலிலேயே தற்போது அதிமுகவிற்கு வேலை பார்க்கும் சுனிலுடன் திமுக கைகோத்திருந்தது. ஆனால் அது இவ்வளவு வெளிப்படையாக அறியப்படவில்லை. கட்சிக்குள் கடும் எதிர்ப்பையும் மீறி ஐபேக் நிறுவனத்துடன் ஸ்டாலின் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஸ்டாலினுக்கு டாடா காட்டிய பிரசாந்த் கிஷோர்… அவ்ளோ தான் முடிஞ்சது எல்லாம்!

தேர்தலுக்கு முன்பும் சரி வாக்குப்பதிவின்போதும் சரி அறிவாலயத்தை விட அதிக பரபரப்பில் இருந்தது தேனாம்பேட்டையிலுள்ள ஐபேக் நிறுவனம் தான். அடுத்தக்கட்ட நகர்வுகள், ஆட்சி அமைத்தால் யாரை அமைச்சராக்கலாம் என அனைத்தும் ஐபேக் போட்டுக்கொடுத்த பாதையில் திமுக பயணிக்கிறது. அதனால் தான் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போதே காலை, மாலை என இருமுறை விசிட் அடித்தார் ஸ்டாலின். நிலவரம் குறித்து ஆலோசனை செய்தார். வாக்குப்பதிவு முடிந்தவுடன் பிரசாந்த் கிஷோர் மொத்தம் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ற ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார்.

ஸ்டாலினுக்கு டாடா காட்டிய பிரசாந்த் கிஷோர்… அவ்ளோ தான் முடிஞ்சது எல்லாம்!

அந்த ரிப்போர்ட்டில் 180 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதனை சமீபத்தில் பேட்டியளித்த பிகே உறுதியும் செய்துவிட்டார். அவர் கணக்குப்படி அனைத்து எதிர்க்கட்சிகளும் மொத்தமாகச் சேர்த்து 50 இடங்கள் மட்டுமே வெற்றிபெறும் என்று கூறியிருந்தார். இத்துடன் ஐபேக் நிறுவனத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டது.

ஸ்டாலினுக்கு டாடா காட்டிய பிரசாந்த் கிஷோர்… அவ்ளோ தான் முடிஞ்சது எல்லாம்!

இதன்மூலம் ஐபேக் உடன் போடப்பட்ட ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. அறிவாலயத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அலுவலகத்தையும் ஐபேக் ஊழியர்கள் காலி செய்துவிட்டு குட்பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்களாம். ஐபேக் டீமுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்த அலுவலகம், தற்போது கட்சியின் செய்தித் தொடர்பு நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.