கடனுக்கான வட்டியை குறைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி… 14,000 புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் எஸ்.பி.ஐ.

கடனுக்கான வட்டியை குறைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி… 14,000 புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் எஸ்.பி.ஐ.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி இந்த ஆண்டு 14 ஆயிரத்துக்கும் அதிகமாக புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளது.

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எம்.சி.எல்.ஆருடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான (பல்வேறு முதிர்வு கால கடன்கள் அடங்கும்) வட்டியை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட இந்த புதிய விகிதங்கள் செப்டம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி செலவினம் குறையும்.

கடனுக்கான வட்டியை குறைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி… 14,000 புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் எஸ்.பி.ஐ.
வட்டி குறைப்பு

இது கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் சிக்கி தவிக்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நகைகள் மீது வழங்கப்படும் வேளாண் கால கடனின் வட்டி விகிதத்தை (ஏ.ஜி.டி.ஏ.ஜே.) ரெப்போ இணைப்பு கடன் விகிதத்துடன் இணைக்கவும் அந்த வங்கி முடிவு செய்துள்ளது. ஏ.ஜி.டி.ஏ.ஜே. வட்டி விகிதத்தை 0.60 சதவீதம் குறைக்கவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முடிவு எடுத்துள்ளது.

கடனுக்கான வட்டியை குறைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி… 14,000 புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் எஸ்.பி.ஐ.
பாரத ஸ்டேட் வங்கி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, இந்த ஆண்டில் புதிதாக 14 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய பணியாளர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. வேலையின்மை அதிகமாக காணப்படும் இந்த காலகட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி புதிதாக பணியாளர்களை தேர்ந்தெடுக்க இருப்பது நல்ல செய்தியாகும்.