• February
    25
    Tuesday

Main Area

Main



இன்னும் 5 நாள்தான் இருக்கு... அதுக்குள்ள உங்க பான் எண்ணை ஆதாருடன் இணையுங்க...

பான் எண் -ஆதார் இணைப்பு
பான் எண் -ஆதார் இணைப்பு

வருமான வரித்துறை பான் எண் (நிரந்திர கணக்கு எண்) வழங்குகிறது. நம் நாட்டில் தற்போது சுமார் 40 கோடி பேரிடம் பான் கார்டு உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய போன்றவற்றுக்கு பான் எண் அவசியம். இந்த பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் அதற்கான காலக்கெடுவை பலமுறை நீடித்து வந்தது.

பான் கார்டு

இந்நிலையில், கடந்த மத்திய பட்ஜெட்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுக்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ச்சியாக வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய பான் எண்ணுக்கு பதில் ஆதாரை கொடுக்கலாம் என வருமான வரி துறை அறிவித்தது.  அதேவேளையில், ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகள் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

ஆதார்

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதி முடிவடைய உள்ளது. அதனால் இன்னும் 5 நாட்களுக்குள் இதுவரை ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் இணைத்து விடுங்கள். இல்லையென்றால்  உங்களது பான் கார்டு வரும் 1ம் தேதி முதல் செல்லாது ஆகிவிடும். அதன்பிறகு நீங்கள் புதிதாக பான் கார்டை வரித்துறையிடம் வாங்க வேண்டியது இருக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.