படையெடுக்கும் பச்சைநிற வெட்டுக்கிளிகள் : விவசாய பயிர்கள் நாசம்!

 

படையெடுக்கும் பச்சைநிற வெட்டுக்கிளிகள் : விவசாய பயிர்கள் நாசம்!

திண்டுக்கல்லுக்கு படையெடுக்கும் பச்சைநிற வெட்டுக்கிளிகளால் பல ஏக்கர் விவசாய பயிர்கள் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

படையெடுக்கும் பச்சைநிற வெட்டுக்கிளிகள் : விவசாய பயிர்கள் நாசம்!

ததிண்டுக்கல் மாவட்டத்தில் 2.25 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு மலர், காய்கனி, நெல், கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் பருவமழையின் அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாவட்டத்தில் பரவலாக மழை பொழிவு இருந்து இதையடுத்து பருவ மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் ஓரளவிற்கு மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் மானாவாரிப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை விவசாயிகளுக்கு கைகொடுக்கவில்லை.

படையெடுக்கும் பச்சைநிற வெட்டுக்கிளிகள் : விவசாய பயிர்கள் நாசம்!

இந்நிலையில் திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடி, முள்ளிப்பாடி, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சோளப் பயிர்களை சாகுபடி செய்த நிலையில் கடந்த சில நாட்களாக பச்சை வெட்டுக்கிளியின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது . குறிப்பாக வெட்டுக்கிளிகள் சோளம் பயிரிட்டுள்ள வயல்களை மட்டும் குறிவைத்து தாக்கி நாசம் செய்து வருகின்றன. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான பச்சை நிற வெட்டுக்கிளிகள் சோளம் பயிரிட்டுள்ள வயல்களுக்கு படையெடுத்து வருவதால் சோளம் விளைச்சல் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாக வெட்டுக்கிளிகளால் தங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

படையெடுக்கும் பச்சைநிற வெட்டுக்கிளிகள் : விவசாய பயிர்கள் நாசம்!

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த வெட்டுக்கிளிகள் சாதாரண வெட்டுக்கிளிகள் தான். இதனால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்பில்லை. இதனை எளிதாக கட்டுப்படுத்தி விடலாம் . இதனால் விவசாயிகள் கவலை கொள்ளவேண்டாம் என்று காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பூச்சியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் ஷகில் தாஜ் தெரிவித்துள்ளார்.