‘தண்ணீரில் கலந்து குடிக்கும்’ 2DG கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்!

 

‘தண்ணீரில் கலந்து குடிக்கும்’ 2DG கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. நாளொன்றுக்கு 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு படிப்படியாக 2.81 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், உயிரிழப்புகள் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. கொரோனாவில் இருந்து நம்மை காத்துக் கொள்ள தடுப்பூசி தான் ஒரே வழி என மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள்.

‘தண்ணீரில் கலந்து குடிக்கும்’ 2DG கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்!

அதன் படி, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமடைந்துள்ளது. அதே போல, ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனிடையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்தது. டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) என்று அழைக்கப்படும் பவுடர் வடிவிலான இந்த மருந்தை டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து டிஆர்டிஓ அமைப்பு கண்டுபிடித்தது.

‘தண்ணீரில் கலந்து குடிக்கும்’ 2DG கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்!

முதற்கட்டமாக 10 ஆயிரம் டோஸ் மருந்துகள் தயாரிக்கப்பட்டன. இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கும் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல்களின் வளர்ச்சி தடுக்கப்படும். அதோடு, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமலும் தடுக்கும். இந்த மருந்தை இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ஹர்ஷ்வர்தன் அறிமுகப்படுத்தினர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.