48 எம்.பி கேமராவுடன் எல்ஜி கியூ52 ஸ்மார்ட் போன் அறிமுகம்

 

48 எம்.பி கேமராவுடன் எல்ஜி கியூ52 ஸ்மார்ட் போன் அறிமுகம்

48 எம்.பி கேமரா கொண்ட கியூ52 என்ற புதிய ஸ்மார்ட்போனை எல்ஜி நிறுவனம் தென்கொரியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எல்ஜி, ஸ்மார்ட்போன் விற்பனையிலும் கலக்கி வருகிறது. அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை அறிமுகப்படுத்தி வரும் எல்ஜி நிறுவனம், அதன் கியூ51 வெற்றியை தொடர்ந்து தற்போது கியூ52 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

48 எம்.பி கேமராவுடன் எல்ஜி கியூ52 ஸ்மார்ட் போன் அறிமுகம்

6.6 இன்ச் எச்டி பிளஸ் திரை, ஆண்டிராய்ட் 10 2.3 ஜிகா ஹெர்ட்ஸ் அக்டா கோர் பிராசசர், 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி உடன் வரும் இந்த போனின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் இதன் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள 48 மெகா பிக்சல் கேமரா செட் அப் தான், பின்புறத்தில் இந்த 48 எம்.பி கேமரா உள்பட மொத்தம் 4 கேமராக்களும் முன்புறத்தில் 13 எம்.பி கேமராவும் உள்ளது. மேலும் பக்கவாட்டில் விரல்ரேகை சென்சார் மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் இந்த போன், வைபை புளூடூத் 5.0 என சகல நவீன வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

48 எம்.பி கேமராவுடன் எல்ஜி கியூ52 ஸ்மார்ட் போன் அறிமுகம்

தற்போதைக்கு தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போனின் விலை இந்திய மதிப்பில் 21,500 ரூபாய் ஆகும். இந்தியாவில் பண்டிகை கால விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளதால் இந்த போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்