பட்ஜெட் விலையில் லேப்டாப் -அவிட்டா அறிமுகம்

 

பட்ஜெட் விலையில் லேப்டாப் -அவிட்டா அறிமுகம்

அவிட்டா நிறுவனம் எசன்ஷியல் என்ற குறைந்த விலை லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

பட்ஜெட் விலையில் லேப்டாப் -அவிட்டா அறிமுகம்
Avita Liber: New entrant in the laptop market - The Hindu BusinessLine

குறைந்த விலையில் பல நிறுவனங்கள் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தி வருவதால், இந்திய மடிகணிணி சந்தையில் பெரும் போட்டி உருவாகி வருகிறது. பல சீன நிறுவனங்களும் இந்த பிரிவில் தற்போது கவனம் செலுத்த தொடங்கி உள்ளன. இந்நிலையில் அவிட்டா நிறுவனம் எசன்ஷியல் என்ற பட்ஜெட் விலை லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த லேப்டாப்பில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த லேப்டாப், இன்டெல் செலிரான் என்4000 பிராசசர் (2.4 ஜிகா ஹெர்ட்ஸ்), 14 இன்ச் ஃபுல் எச்டி திரை, ஆறு மணிநேர பேட்டரி திறன், 4 ஜி.பி டிடிஆர்4 ரேமுடன் வருகிறது. கூடுதல் சிறப்பாக இதில் 2 மெகா பிக்சல் வெப்கேம் உள்ளது.

விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளத்தில் இயங்கும் இந்த லேப்டாப்பில் 128 ஜி.பி மெமரி, இன்டெல் யுஎச்டி கிராபிக்ஸ் 600, 0.8 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளது.

போர்டுகளை பொறுத்தவரை, ஒரு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி 3.0 போர்ட், மைக்ரோ எஸ்டி கார்ட் ரீடர், ஹெட்போன் ஜாக், மற்றும் பவர் ஜாக் உடன் அறிமுமாகி உள்ள இந்த லேப்டாப்பின் எடை 1.37 கிலோ ஆகும்.

இந்தியாவில் இதன் அறிமுக விலை 17,990 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் வெஸ்டிவல் விற்பனையில் இந்த லேப்டாப், 14,990 ரூபாய் என்ற தள்ளுபடி விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் லேப்டாப் -அவிட்டா அறிமுகம்
  • எஸ். முத்துக்குமார்