சென்னையில் தாண்டவமாடும் கொரோனா! நடமாடும் மருத்துவமனைகளைக் களமிறக்க முடிவு!

சென்னையில் தாண்டவமாடும் கொரோனா! நடமாடும் மருத்துவமனைகளைக் களமிறக்க முடிவு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுள் பெரும்பாலானோருக்கு அதன் அறிகுறி இல்லை என வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதனால், கொரோனா பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் தாண்டவமாடும் கொரோனா! நடமாடும் மருத்துவமனைகளைக் களமிறக்க முடிவு!

இந்நிலையில் சென்னையில் 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படுவிருப்பதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதன்படி சென்னையின் 15 மண்டலங்களிலும் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு ஆம்புலன்ஸ் போன்ற நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சுகாதாரத்துறை இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.