”ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு 3 வருடாந்திர திட்டங்கள் அறிமுகம்”

 

”ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு 3 வருடாந்திர திட்டங்கள் அறிமுகம்”

ரிலையன்ஸ் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு மூன்று ஆல் இன் ஒன் வருடாந்திர கட்டண திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, ரூ.1001, ரூ.1301, ரூ.1501, என மொத்தம் 3 வருடாந்திர கட்டண திட்டங்களை ஜியோ போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மூன்று திட்டங்களுக்குமே மொத்தம் 336 நாட்கள் வேலிடிட்டியும் ஜியோ எண்களுக்கு இலவச அழைக்கும் வசதியும், மற்ற எண்களுக்கு 12 ஆயிரம் நிமிடங்கள் வரை இலவசமாக அழைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. அதாவது மாதம் ஆயிரம் அழைப்புகள் மேற்கொண்டால் கூட ஆண்டு முழுவதும் பேசுவதற்கு போதுமானது.

”ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு 3 வருடாந்திர திட்டங்கள் அறிமுகம்”

இதைத்தவிர, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும், ஜியோ நிறுவனத்தின் செயலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆஃபரும் வழங்கப்படுகிறது. ஆனால் டேட்டா வழங்கலில் மட்டும் திட்டங்களுக்குள் மாறுபாடு இருக்கிறது.

”ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு 3 வருடாந்திர திட்டங்கள் அறிமுகம்”

இதில் 1001 ரூபாய் திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு 150எம்பி டேட்டா அளவுடன், மொத்தம் 49 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 1301 ரூபாய் திட்டத்தில், தினசரி 500எம்பி டேட்டா வீதம், மொத்தம் 164 ஜிபி டேட்டாவும், 1501 ரூபாய் திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி டேட்டா வீதம், மொத்தம் 504ஜிபி டேட்டாவும் பயன்படுத்த கிடைக்கிறது.

மாதந்தோறும் ரீசார்ஜ் செய்ய விரும்பாமல், ஆண்டுக்கு ஒரே முறை ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்த மூன்று ஆல் இன் ஒன் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ரிலையன்ஸ் ஜியோ போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என்றும் தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்