இன்று வேட்பாளர்களை இன்டர்வியூ எடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்

 

இன்று வேட்பாளர்களை இன்டர்வியூ எடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக கட்சிகள் கூட்டணி பங்கீடு குறித்து தீவிரமாக பேசி வருகின்றனர். திமுகவைப் பொறுத்தவரை முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் மதிமுக ,விசிக, காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை இன்னும் அஇழுபறியிலேயே உள்ளது.

இன்று வேட்பாளர்களை இன்டர்வியூ எடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்

அதேபோல் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு விநியோகம் நடைபெற்றது. விருப்பமனு கொடுப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இதனால் அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதுவரை சுமார் 8,240 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெற உள்ளது.

இன்று வேட்பாளர்களை இன்டர்வியூ எடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் ,கே.பி. முனுசாமி, உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று இன்று காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் 26 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த முறை 8,240 பேர் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.