சர்வதேச யோகா தினம் 2020 : யோகா ஆர்வமுள்ளவர்களா நீங்கள்? நிச்சயம் இந்த கோயில்களுக்கு சென்று வழிபடுங்கள்!

 

சர்வதேச யோகா தினம் 2020 : யோகா ஆர்வமுள்ளவர்களா நீங்கள்?  நிச்சயம் இந்த கோயில்களுக்கு சென்று வழிபடுங்கள்!

சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. யோகாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி செய்து வந்தால் நிம்மதியாக வாழலாம். 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

யோகா பயிற்சி செய்பவர்கள் வழிப்படுவதற்கு என்று பிரத்யேகமான ஆலயங்கள் சில உள்ளன. இங்கு சென்று வழிபடுவதின் மூலம் பல நற்பலன்களை பெறலாம்.

  • ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோயில், திருப்பட்டூர்

திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலுருக்கு அருகில் திருப்பட்டூர் எனும் இடத்தில் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோயில் எனும் பிரம்மா மற்றும் குருவிற்கான கோயில் உள்ளது அதன் அருகே பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியும், புலிக்கால் முனிவரின் திருக்கோயிலும் அமைந்துள்ளது. அங்கு சென்று குரு, பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் ஆகியவர்களை வணங்குவது யோகக்கலையைப் பயில்பவர்களுக்கும், பயிற்சி செய்பவர்களுக்கும் மேலும் சிறப்பை தரும்.

  • பதினெட்டு சித்தர்கள் ஆலயம், சென்னை

சென்னையில், தாம்பரம் கேம்ப் ரோடு அருகே பதினெட்டு சித்தர்களுக்கான ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது ஆகியவை யோகக்கலை பயில விரும்பும் மற்றும் யோக கலை ஆசிரியர்களாக விளங்க சிறந்த வழிபாட்டு தலங்களாகும்

  • அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி

முருகனை பழனி மலைக்குச் சென்று தரிசிப்பது யோககலையில் சிறந்த நிலை அடைய உதவும்.

  • நடராஜ பெருமாள் ஆலயம், சிதம்பரம்

சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம், திருவாலங்காடு ஆகிய பஞ்ச சபைகளில் நடராஜ பெருமானை வணங்குவது, நடனம் யோககலை ஆகியவற்றில் உன்னத நிலை அடைய செய்யும். இருந்தாலும், இந்த பஞ்ச சபைகளில், சிதம்பரம் நடராஜபெருமானின் நடன நிலையைத் தான் யோகக்கலையின் உச்ச நிலை. இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் யோக கலையில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.