கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள கைக்கொடுக்குமா யோகா?

 

கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள கைக்கொடுக்குமா யோகா?

கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கப்பட வேண்டும். இன்றைய வாழ்க்கை முறை நமக்கு
மனஅழுத்தத்தை உண்டாக்குவதாகவே உள்ளது. மனஅழுத்தம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கிறது. எனவே, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும் யோகப்பயிற்சி சிறந்த முன்தடுப்பு நடவடிக்கை ஆகும்.

யோகாசனம், பிரணாயாமம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ஆகியன மூச்சுக்குழாய் அடைப்பை நீக்கி தசைகளை வலுவாக்குவதோடு கிருமி வளரும் சூழலையும் குறைப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இன்றைய காலகட்டத்தில கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு போராட்ட உத்தியாக அனைவரும் யோகப் பயிற்சியைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 

கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள கைக்கொடுக்குமா யோகா?

 

யோகா பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சையாகவும் பயன்படுகின்றது. இந்த சர்வதேச யோகா தினத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான யோகப் பயிற்சிகளைத் தெரிந்து கற்றுக் கொண்டு அதைத் தொடர்ந்து செய்து வருவோம். வருங்காலத்தில் மீண்டும் ஒரு நுண்ணுயிர் நம்மைப் பாதிக்காத வகையில் உடலினை உறுதி செய்வோம்.