ஜூன் 21ம் தேதி யோகா தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் தெரியுமா? அசரவைக்கும் அறிவியல் உண்மை!

 

ஜூன் 21ம் தேதி யோகா தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் தெரியுமா? அசரவைக்கும் அறிவியல் உண்மை!

நம்முடைய பாரம்பரிய மரபுகளில் பல்வேறு கலைகள் இருப்பினும் நமது உடம்பையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதில் யோகக் கலை தனிச்சிறப்பு வாய்ந்தது. யோகா தமிழர்களின் கலை. சித்தர்கள் கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்றறிந்தார்கள். இன்று நமது மரபு ரீதியாக வந்த கலையை, நாம் பயிலாமல் வெளிநாட்டினர் யோக கலையின் அருமை உணர்ந்து நமது கலையை கற்று தேறி வருகிறார்கள். நம்முடைய பாரம்பரிய மரபுகளில் பல்வேறு கலைகள் இருப்பினும் நமது உடம்பையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதில் யோகக் கலை தனிச்சிறப்பு வாய்ந்தது. யோகா தமிழர்களின் கலை. சித்தர்கள் கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்றறிந்தார்கள். இன்று நமது மரபு ரீதியாக வந்த கலையை, நாம் பயிலாமல் வெளிநாட்டினர் யோக கலையின் அருமை உணர்ந்து நமது கலையை கற்று தேறி வருகிறார்கள்.

yoga

இயற்கையான முறையில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுவது யோகா மட்டுமே. நோயின் தன்மை,ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளின் அளவு, இயற்கை சிகிச்சையில் ஈடுபாடு, உணவு பழக்க வழக்கங்களில்  கட்டுப்பாடும் முறையாக கடைபிடித்து தினமும் 15 முதல் 20 நிமிடம் தகுந்த வழிகாட்டியின் உதவியுடன் எளிய பயிற்சிகளை மேற்கொண்டால் நோயின்றி நெடுநாட்கள் ஆரோக்கியமாக வாழலாம். ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச்சபையில் வலியுறுத்தி, ஜூன் 21-ம் நாளை இதற்காகப் பரிந்துரைத்திருந்தார்.

yoga

அதுமட்டுமில்லாமல் ஜூன் 21ம் தேதி அறிவியல் ரீதியாகவும் சிறப்பான நாளாக அமைந்திருக்கிறது. இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் நாளாக ஜூன் 21 அமைந்திருக்கிறது. வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் பல உலக நாடுகளில் இந்நாள் அமைந்திருக்கிறது. 2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை ‘சர்வதேச யோகா நாளாக’ அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.  முதல்முறையாக 2015, ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.