இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை அதிகரித்த பன்னாட்டு நிதியம்.. 2021ல் பொருளாதாரத்தில் 12.5 சதவீதம் வளர்ச்சி

இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை அதிகரித்த பன்னாட்டு நிதியம்.. 2021ல் பொருளாதாரத்தில் 12.5 சதவீதம் வளர்ச்சி

2021ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 12.5 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என பன்னாட்டு நிதியம் மறுமதிப்பீடு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்த லாக்டவுன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதித்தது. இருப்பினும் லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டதால் பொருளாதாரம் மெல்ல மெல்ல மீள தொடங்கியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வந்து கொண்டு இருப்பதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டது.

இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை அதிகரித்த பன்னாட்டு நிதியம்.. 2021ல் பொருளாதாரத்தில் 12.5 சதவீதம் வளர்ச்சி
பன்னாட்டு நிதியம்

இந்நிலையில் கடந்த ஜனவரியில் பன்னாட்டு நிதியம் தனது உலக பொருளாதார பார்வை அறிக்கையில், 2021ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும் என கணித்து இருந்தது. தற்போது பன்னாட்டு நிதியம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தனது மதிப்பீட்டை அதிகரித்துள்ளது. பன்னாட்டு நிதியம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை அதிகரித்த பன்னாட்டு நிதியம்.. 2021ல் பொருளாதாரத்தில் 12.5 சதவீதம் வளர்ச்சி
இரவு ஊரடங்கு (கோப்புப்படம்)

பொருளாதரா மீட்பு மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை பொருளாதார வளர்ச்சி அதிகரிப்புக்கு முக்கியகாரணமாக பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என பன்னாட்டு நிதியம் கணித்துள்ளநிலையில், நம் நாட்டில் கொரோனா வைரஸின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் மகாராஷ்டிரா டெல்லி மற்றும் குஜராத் என பல மாநிலங்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் பகுதிகளில் லாக்டவுன் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கு அளிக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு நிதியத்தின் கணிப்பின்படி இந்தியாவின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுமா என்பது சந்தேகம்தான் என பலர் தெரிகின்றனர்.