இந்தியாவில் ஜூலை 15 வரை சர்வதேச வர்த்தக விமானங்கள் நிறுத்தம்

 

இந்தியாவில் ஜூலை 15 வரை சர்வதேச வர்த்தக விமானங்கள் நிறுத்தம்

டெல்லி: இந்தியாவில் ஜூலை 15 வரை சர்வதேச வர்த்தக விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாக சிவில் விமானப் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.

இந்தியாவில் சர்வதேச வர்த்தக விமானங்கள் ஜூலை 15 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று சிவில் விமானப் கண்காணிப்புக் குழு டிஜிசிஏ அறிவித்துள்ளது. சர்வதேச சரக்கு நடவடிக்கைகள் மற்றும் விமான ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜூலை 15 வரை சர்வதேச வர்த்தக விமானங்கள் நிறுத்தம்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது சர்வதேச வணிக விமானங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் கடந்த மாதம் உள்நாட்டு விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.