• December
    12
    Thursday

Main Area

Main



சென்னையில் நகரத்தார்களின் சர்வதேச மாநாடு | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

காணிகாணியாய்த் தேடி, கோடி கோடியாய் தருமம் செய்த சமூகம் என்று நகரத்தார் சமூகத்தை இன்று வரையிலும் பாராட்டுகிறார்கள். மூவேந்தர்களின்  ஆட்சி முடிந்து. பிற மதத்தவர்களின் ஆட்சி ஏற்பட்ட பின்னரும் சைவ சமய நம்பிக்கையை மட்டுமே உறுதியாக கொண்ட நகரத்தார் சமூகம் எந்த மத மாற்றத்தையும் ஏற்காது தனித்து நின்ற சமூகம் இன்று வரையிலும் தங்களின் பண்பாட்டுப் பதிவுகளை அவர்களின் வாழ்வியலோடு தக்க வைத்திருக்கிறார்கள். சோழ மன்னனுக்கு முடி சூட்டும் உரிமை நகரத்தாருக்கு மட்டுமே இருந்தது. நகரத்தார் தம்பதியுடன் வந்து தான் மன்னனுக்கு முடி சூட்ட வேண்டும் என்பதிலிருந்து நகரத்தார்களின் பெருமையை அறியலாம். 

nagarathar

இன்று கம்பீரமாக வீற்றிருக்கும் ஆலயங்கள், பாடசாலைகள், பசுமடங்கள், சத்திரங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று காசி முதல் இராமேஸ்வரம் வரை இவர்களின் அறப்பணி இல்லாத இடம் இல்லை எனும் படி எல்லா இடங்களிலும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பங்களிப்பு பயன் தந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகையால் சிறிய சமூகமே ஆனாலும், இன்று வரையிலும் அவர்களுக்குள்ளான பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கும் தாங்கி பிடித்து வருகிறார்கள். 

 

nagatharas

இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து நடைபெற்று வரும் நகரத்தார்களின் சர்வதேச வர்த்தக மாநாடு இந்த வருடத்தில்,இம்மாதம் 19ம் தேதியில் இருந்து ஜூலை  21ம் தேதி வரையில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடக்கவிருக்கிறது.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைக்கும் இந்த மாநாடு நகரத்தார்களின் சங்கமிப்பாக இருக்கும். அவர்களின் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும், கடல் கடந்து பொருளீட்டிக் கொண்டிருக்கும் நகரத்தார்களின் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் வாய்ப்பாகவும் இருக்கும். 

nirmala seetharaman

இன்றைய தலைமுறையினர் பிரமிக்கும் நகரத்தார்களின் கட்டமைப்பு, கட்டிடக்கலை, திட்டமிடுதல், அனுபவங்கள் எல்லாம் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் முயற்சியாக இருக்கும் இந்த மாநாட்டில், அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டுதலும், அனுபவ பகிர்வும் அந்த மூன்று நாட்களுக்கும் திருவிழாவாகவே கொண்டாட இருக்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.