இவர்கள் 2 பேரும் ‘ஸ்டார்ஸ் ஆப் கோவிட்’ !- திருச்சி டிஐஜி, டாக்டரை கெளரவித்த சர்வதேச அமைப்பு

இவர்கள் 2 பேரும் ‘ஸ்டார்ஸ் ஆப் கோவிட்’ !- திருச்சி டிஐஜி, டாக்டரை கெளரவித்த சர்வதேச அமைப்பு

கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன் உட்பட 100 பேருக்கு சர்வதேச அமைப்பு சார்பில் ‘ஸ்டார்ஸ் ஆப் கோவிட்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 2 பேரும் ‘ஸ்டார்ஸ் ஆப் கோவிட்’ !- திருச்சி டிஐஜி, டாக்டரை கெளரவித்த சர்வதேச அமைப்பு

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு வேர்ல்டு ஹூமானிட்டேரியன் டிரைவ் (WHD) என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா காலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து சிறப்பாக பணியாற்றிய 100 பேர் கவுரவிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அவர்களில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சியை சேர்ந்த டாக்டர் அ.முகமது ஹக்கீம் இடம்பிடித்தனர்.

கொரோனா காலத்தில் பொதுமக்களை அலையவிடாமல் ஆன்லைன் மூலம் குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொண்டதற்காக திருச்சி சரக டி.ஐ.ஜி வே.பாலகிருஷ்ணனுக்கும், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரத்யேக முகக்கவசம் ‘ஸ்டார்ஸ் ஆப் கோவிட்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 2 பேரும் ‘ஸ்டார்ஸ் ஆப் கோவிட்’ !- திருச்சி டிஐஜி, டாக்டரை கெளரவித்த சர்வதேச அமைப்பு

லண்டனில் உள்ள சர்வதேச அமைப்பின் தலைமையகத்தில் நேற்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேபாள முன்னாள் பிரதமர் மாதவ்குமார், கொசோவா நாட்டின் முன்னாள் அதிபர் பத்மிர் சேஜ்டியூ, வேர்ல்டு ஹூமானிட்டேரியன் டிரைவ் அமைப்பின் நிறுவனர் அப்துல் பாசித் சையத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, ‘ஸ்டார்ஸ் ஆப் கோவிட்’ விருது பெற்ற 100 பேரையும் பாராட்டி கெளரவித்தனர்.