தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ சிவனுக்கு சர்வதேச விருது

 

தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ சிவனுக்கு சர்வதேச விருது

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகப் பணியாற்றுபவர் சிவன். தமிழகத்தைச் சேர்ந்த இவருக்கு உலகளவில் புகழ்பெற்ற வோன் கார்மான் விருது கிடைத்துள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரி அருகேயுள்ள சின்ன கிராமத்தில் பிறந்தவர் சிவன். தமிழ் வழிக்கல்வியில் படித்து இன்று விண்வெளியை ஆய்வு செய்யும் முக்கியமான பொறுப்பில் இடம்பிடித்திருக்கிறார். டாக்டர் விக்ரம் சாரா பாய் ஆய்வு விருது, ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் சிவனுக்கு இன்னொரு மகத்தான விருது கிடைத்திருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ சிவனுக்கு சர்வதேச விருது

உலகளவில் விண்வெளித் துறையில் உயர்ந்த விருதாக போற்றப்படும் ‘வோன் கார்மான்’ விருதிற்காக இஸ்ரோ சிவன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் 2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருதினைப் பெறும் மூன்றாவது இந்தியர் ஆவார். இதற்கு முன் இந்த விருதை பேராசிரியர் உடுப்பி இராமச்சந்திர ராவ் அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டிலும், 2007 ஆம் ஆண்டில் டாக்டர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ தலைவராக செயல்பட்டு வரும் வானியல் விஞ்ஞானி சிவன் பிஎஸ்எல்வி ராக்கெட் மற்றும் சந்திராயன்-2 ஆகிய திட்டப் பணிகளில் முழுமையான பங்களிப்பை வழங்கியவர்.

தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ சிவனுக்கு சர்வதேச விருது

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெறும் விழாவில் திரு சிவன் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் எனப்படும் சர்வதேச வானியல் அகாடமி தெரிவித்திருக்கிறது.

வோன் கார்மான் விருதை பெறும் தமிழகத்தை சேர்ந்த வானியல் விஞ்ஞானி சிவனுக்கு, பல்வேறு துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.