சபரிமலை விமானநிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை!

 

சபரிமலை விமானநிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை!

சபரிமலைக்கு விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த கேரள அரசு பிறப்பித்த ஆணைக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். நேரடியாக சமரிமலைக்கு வர விமான சேவை இல்லை.

சபரிமலை விமானநிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை!

இதைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக கோட்டயம் மாவட்டத்தில் சபரிமலைக்கு அருகில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலத்தை கையகப்படுத்த அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

சபரிமலை விமானநிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை!இதை எதிர்த்து அயனா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள எருமேலி மற்றும் மனிமாலா கிராமத்திற்குபட்ட 2,263 ஏக்கர் நிலத்தை 2005ம் ஆண்டு எங்கள் அறக்கட்டளை விளைக்கு வாங்கியது. ஆனால் இது அரசு நிலம் என்று கூறி கையகப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான பிரச்னை எழவே, அறக்கட்டளைக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதில் அதை சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய அரசு உத்தரவிட்டது நியாயமில்லை என்று கூறியிருந்தது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும், விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.