சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் தாமஸுக்கு இடைக்கால ஜாமீன்!

 

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் தாமஸுக்கு இடைக்கால ஜாமீன்!

தந்தை உயிரிழந்த காரணத்தில், சாத்தான்குள விவகாரத்தில் கைதான காவலர் தாமஸுக்கு நீதிபதிகள் 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் 10 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவரான காவலர் பால்ராஜ் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, சிறையில் இருக்கும் 9 காவலர்களுக்கும் ஜாமீன் கிடைக்காத வண்ணம் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் தாமஸுக்கு இடைக்கால ஜாமீன்!

இந்த நிலையில், காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தாமஸ் பிரான்சிஸ் தந்தை உயிரிழந்ததால் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அக்.19ம் தேதி மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி அப்துல்குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார்.