இண்டிகோ விமான நிறுவனத்தின் லாப கனவை சிதைத்த லாக்டவுன்… ரூ.871 கோடி நஷ்டம்..

இண்டிகோ விமான நிறுவனத்தின் லாப கனவை சிதைத்த லாக்டவுன்… ரூ.871 கோடி நஷ்டம்..

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க மத்திய அரசு அமல்படுத்திய நாடு தழுவிய லாக்டவுனால் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக விமானங்கள் பறப்பதை மறந்து விட்டு விமான நிலையங்களில் இளைப்பாறி கொண்டு இருந்தன. லாக்டவுன் விமானத்துறையில் ஏற்படுத்திய பேரழிவு தற்போது விமான நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளில் எதிரொலிக்கிறது.

இண்டிகோ விமான நிறுவனத்தின் லாப கனவை சிதைத்த லாக்டவுன்… ரூ.871 கோடி நஷ்டம்..

இண்டிகோ விமானங்களை இயக்கி வரும் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் இண்டிகோ நிறுவனம் ரூ.870.80 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனம் 2019 மார்ச் காலாண்டில் ரூ.595.80 கோடி லாபம் ஈட்டியிருந்தது. 2020 மார்ச் காலாண்டில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.8,299.1 கோடியாக உயர்ந்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவனத்தின் லாப கனவை சிதைத்த லாக்டவுன்… ரூ.871 கோடி நஷ்டம்..

இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் மொத்தம் ரூ.9,924.4 கோடிக்கு செலவினங்களை மேற்கொண்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகமாகும். 2019-20ம் நிதியாண்டில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் ரூ.233.70 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது. 2018-19ம் நிதியாண்டில் அந்நிறுவனம் ரூ.157.20 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது.