உயர்ந்து கொண்டே செல்லும் இண்டிகோ நஷ்டம்… விமான சேவை நிறுவனத்தின் சோகம்…..

 

உயர்ந்து கொண்டே செல்லும் இண்டிகோ நஷ்டம்… விமான சேவை நிறுவனத்தின் சோகம்…..

விமான சேவையில் ஈடுபட்டு வரும் இன்டர்குளோப் ஏவியேஷன் (இண்டிகோ) நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ரூ.1,194.8 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்துக்கு ரூ.1,062 கோடி மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

உயர்ந்து கொண்டே செல்லும் இண்டிகோ நஷ்டம்… விமான சேவை நிறுவனத்தின் சோகம்…..
இண்டிகோ விமானம்

2020 செப்டம்பர் காலாண்டில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,741 கோடியாக குறைந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் ரூ.8,105.2 கோடியை வருவாயாக ஈட்டியிருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி. இந்நிறுவனத்தின் மொத்த கடன் 28.1 சதவீதம் உயர்ந்து ரூ.25,419.4 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த ரொக்க கையிருப்பு ரூ.17,931 கோடியாக குறைந்துள்ளது.

உயர்ந்து கொண்டே செல்லும் இண்டிகோ நஷ்டம்… விமான சேவை நிறுவனத்தின் சோகம்…..
ரோனாஜோய் தத்தா

இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோனாஜோய் தத்தா கூறுகையில், மெதுவாக ஆனால் நிச்சயமாக இயல்புநிலைக்கு திரும்பி வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போதைய நெருக்கடியை நிர்வகிப்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எதிர்காலத்தின் வாக்குறுதியையும் மறுபரிசீலனை செய்கிறோம். நாங்கள் 100 சதவீத திறனுக்கு திரும்பியவுடன், குறைந்த யூனிட் செலவினங்கள், வலுவான புரோடக்ட் திறமையான குழு மற்றும் வலுவான நெட்வொர்க் ஆகியவற்றை கொண்டிருப்போம். எதிர்காலத்தின் வருகைக்காக நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம் என்று தெரிவித்தார்.