’கோலியைக் காப்பாற்றிய தோனி’ முன்னாள் வீரர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்

 

’கோலியைக் காப்பாற்றிய தோனி’ முன்னாள் வீரர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. அதிரடி பேட்ஸ்மேன் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். அணியில் நிலைத்து ஆடுவதில் பெயர் பெற்றவர்.

இப்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அதில் ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோற்றதும், இனி இந்தியா வெல்ல வாய்ப்பே இல்லை என்று பலரும் கணித்தார்கள். ஆனால், அணியில் பல மாற்றங்கள் கொண்டு வந்து மூன்றாம் ஒருநாள் போட்டியில் வெல்ல வைத்தார் விராட் கோலி.

’கோலியைக் காப்பாற்றிய தோனி’ முன்னாள் வீரர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்

அதேபோல, டி20 போட்டிகளில் நடராஜன், ஹிர்திக் பாண்டியா, ராகுலை பக்கபலமாக வைத்து, அவர்களைச் சரியாகப் பயன்படுத்தி தொடரையே வென்றார் விராட் கோலி.

இந்நிலையில் அடுத்து டெஸ்ட் போட்டித் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஒரு பேட்டியில், ”2011 – 12 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் முடிவடைந்த பிறகு, விராட் கோலியை அணியிலிருந்து நீக்கும் முடிவில் நிர்வாகம் இருந்திருக்கிறது. ஏனெனில், அப்போது கோலி இளம் வீரர். அதனால், ஆனால், அந்த முடிவை மாற்ற வைத்து கோலியைக் காப்பாற்றி, அணியில் நீடிக்க வைத்தவர் அப்போதைய கேப்டன் தோனி” என்று தெரிவித்திருக்கிறார்.

’கோலியைக் காப்பாற்றிய தோனி’ முன்னாள் வீரர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்

கோலி மீது தோனி வைத்த நம்பிக்கையே இன்று அவரை கேப்டனாக ஜொலிக்க வைத்திருக்கிறது.