CSK டீமின் முதல் கேப்டன் சாய்ஸ் தோனி இல்லையாம்! வேறொருவர்தானாம்

CSK டீமின் முதல் கேப்டன் சாய்ஸ் தோனி இல்லையாம்! வேறொருவர்தானாம்

ஐபிஎல் போட்டிகளில் மிக முக்கியமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமையில் அட்டகாசமான ஆட்டத்தை ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளின்போதும் வெளிகாட்டி வருகிறது.

2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. ஆறு முறை இறுதி போட்டி வரை முன்னேறிச் சென்றது.

CSK டீமின் முதல் கேப்டன் சாய்ஸ் தோனி இல்லையாம்! வேறொருவர்தானாம்

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டீமிடம் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இன்னும் பல சாதனைகளைப் பட்டியலிடலாம். இவற்றிற்கு முக்கியக் காரணம், மகேந்திர சிங் தோனியின் கேப்டன்ஷிப் என்றால் யாருமே மறுக்க மாட்டார்கள்.

கூல் கேப்டன் என்று எல்லோராலும் கொண்டாடப்படும் தோனி, சிஎஸ்கே டீமை சிறப்பாக வழிநடத்துகிறார். சென்னை ரசிகர்கள் ‘தல’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

CSK டீமின் முதல் கேப்டன் சாய்ஸ் தோனி இல்லையாம்! வேறொருவர்தானாம்

ஆனால், 2008 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முதலில் கேப்டனாக்க நினைத்தது தோனியை இல்லையாம்.

முன்னாள் வீரர் பத்ரிநாத் ஒரு பேட்டியில் இந்தச் செய்தியைக் கூறியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் முதலில் சேவாக்கைத்தான் டீம் கேப்டனாக்க நினைத்ததாம். ஆனால், சேவாக் டெல்லி டீமில் செட்டாகி விட்டதால் தோனியைத் தேர்வு செய்தனராம்.

CSK டீமின் முதல் கேப்டன் சாய்ஸ் தோனி இல்லையாம்! வேறொருவர்தானாம்

அப்போதைய சூழலில் அதிரடி மன்னனாகக் கலக்கி வந்தவர் வீரேந்திர சேவாக்தான். 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதால் தோனியின் பக்கம் பார்வை சென்றதாம்.

CSK டீமின் முதல் கேப்டன் சாய்ஸ் தோனி இல்லையாம்! வேறொருவர்தானாம்

சிஎஸ்கே நிர்வாகம் நினைத்தபடி சேவாக் கேப்டனாக வந்திருந்தால் தோனி எனும் சிறப்பான கேப்டனை சிஎஸ்கே இழந்திருக்கும்.