“நாங்கள் அடக்க முடியாத யானை எதிர்க்கட்சி தலைவர் அவர்களே” – முதல்வருக்கும் எடப்பாடிக்கும் இடையே சுவாரஸ்ய விவாதம்!

“நாங்கள் அடக்க முடியாத யானை எதிர்க்கட்சி தலைவர் அவர்களே” – முதல்வருக்கும் எடப்பாடிக்கும் இடையே சுவாரஸ்ய விவாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதற்குப் பிறகு கடந்த இரு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டு பேசினர். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர். கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் பதிலுரை வழங்கினார்.

“நாங்கள் அடக்க முடியாத யானை எதிர்க்கட்சி தலைவர் அவர்களே” – முதல்வருக்கும் எடப்பாடிக்கும் இடையே சுவாரஸ்ய விவாதம்!
“நாங்கள் அடக்க முடியாத யானை எதிர்க்கட்சி தலைவர் அவர்களே” – முதல்வருக்கும் எடப்பாடிக்கும் இடையே சுவாரஸ்ய விவாதம்!

அதற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். இந்த அறிக்கையில் மணியோசையும் இல்லை. யானையும் இல்லை” என்று சொன்னார். இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “யானை என்று சொன்னதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக என்பது யாராலும் அடக்க முடியாத யானை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்கு கால்கள்தான் யானையினுடைய பலம். ‘சமூக நீதி, சுயமரியாதை, மொழி-இனப்பற்று, மாநில உரிமை’ ஆகிய நான்கின் பலத்தில்தான் திமுகவும் நிற்கிறது; இந்த அரசும் நிற்கிறது. இந்த ஆளுநர் உரையைப் படிப்பவர் கண்களுக்குச் சமூக நீதியும், சுயமரியாதையும், தமிழுக்கும், தமிழர்க்கும் நாங்கள் செய்ய இருக்கும் நன்மைகளும், மாநில உரிமைகளுக்கான எங்களது முழக்கங்களும் நிச்சயம் தெரியும்” என்றார். சட்டப்பேரவையில் இது ஒரு சுவாரஸ்யமான விவாதமாக அமைந்தது.