விருப்பமுடைய மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம்- மத்திய அரசு

 

விருப்பமுடைய மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம்- மத்திய அரசு

அன்லாக் 4.0 விதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

செப்.21 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விருப்பமுடைய மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்ற பிறகே பள்ளிக்கு வர வேண்டும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விருப்பமுடைய மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம்- மத்திய அரசு

பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுய விருப்பத்தின்படி மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.