கோவையில் குட்டையில் முகாமிட்ட 2 காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்!

 

கோவையில் குட்டையில் முகாமிட்ட 2 காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்!

கோவை

கோவை மாவட்டம் நரசிபுரம் பகுதியில் முகாமிட்டு உள்ள 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் நரசிபுரம் ஆத்தூர் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு உணவு தேடி 2 ஆண் காட்டு யானைகள் புகுந்தன. நேற்று காலை விடிந்து விட்டதால், இரு யானைகளும், அங்குள்ள நெரிஞ்சிக்குட்டைகள் தஞ்சமடைந்தன. இதனை கண்ட அந்த பகுதி மக்கள், போளுவம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

கோவையில் குட்டையில் முகாமிட்ட 2 காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்!

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானைகளை பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் குட்டையில் இருந்து வெளியேறாமல் அங்கேயே முகாமிட்டன. இதனால் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில், வனத்துறையினரின் நீண்ட போராட்டத்திற்கு பின்னர், நேற்று மாலை குட்டையில் இருந்து 2 யானைகளும் வெளியேறின. இதனை அடுத்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.