நாகையில் கருவாடு உற்பத்தியில் மீனவர்கள் தீவிரம்

நாகையில் கருவாடு உற்பத்தியில் மீனவர்கள் தீவிரம்

நாகை மாவட்டத்தில் கொரோனோ ஊரடங்கு காரணமாக முடங்கியிருந்த கருவாடு தயாரிக்கும் தொழிலானது தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

நாகையில் கருவாடு உற்பத்தியில் மீனவர்கள் தீவிரம்
நாகையில் கருவாடு உற்பத்தியில் மீனவர்கள் தீவிரம்

இதற்காக நாகை துறைமுகத்தில் இருந்து மீன்களை வாங்கும் வியாபாரிகள், அதனை கருவாடாக காயவைத்து பதப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். நாளொன்றுக்கு 500 கிலோ முதல் ஒரு டன் அளவிற்கு கருவாடுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில்,லாரிகள் மூலம் திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாகையில் கருவாடு உற்பத்தியில் மீனவர்கள் தீவிரம்

அடைமழை காலங்களில் அசைவப் பிரியர்களின் அன்றாட உணவு தேவையில் கருவாடுகள் முக்கிய பங்கு வகிப்பதால், வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் தயாரித்து வைத்துள்ள கருவாடுகளை ஏற்றுமதி செய்யும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். கருவாடுகளுக்கு நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்வதால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகையில் கருவாடு உற்பத்தியில் மீனவர்கள் தீவிரம்