இ-பாஸ் நடைமுறை ரத்து : கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறக்க ஏற்பாடு தீவிரம்!

 

இ-பாஸ் நடைமுறை ரத்து : கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறக்க ஏற்பாடு தீவிரம்!

கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தலங்களை நாளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இ-பாஸ் நடைமுறை ரத்து : கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறக்க ஏற்பாடு தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் நாளை முதல் வருகின்ற 12ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது . கடந்த சில வாரங்களாக மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை அனைத்து மாவட்டத்திற்கும் ஒட்டுமொத்தமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இபாஸ் மற்றும் இபதிவு நடைமுறையை ரத்து செய்யப்படுகிறது.

இ-பாஸ் நடைமுறை ரத்து : கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறக்க ஏற்பாடு தீவிரம்!


அத்துடன் பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல் ,கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவை நிர்வாகத்தால் முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த பூங்காக்களில் திறந்தவெளியில் நடத்தப்படும் விளையாட்டுக்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து தொற்றுகள் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இபாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ,ரோஜா பூங்கா வைத்திருக்க தோட்டக்கலைத் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.