“சட்டமன்ற தேர்தலில் பாஜகவை ஆதரித்து தீவிர பிரச்சாரம்” – பவர்ஸ்டார் சீனிவாசன் பேச்சு

 

“சட்டமன்ற தேர்தலில் பாஜகவை ஆதரித்து தீவிர பிரச்சாரம்” – பவர்ஸ்டார் சீனிவாசன் பேச்சு

திருப்பத்தூர்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் கிராமத்தில் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது. இதில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பொங்கல் வைத்த பெண்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார். பின்னர் கூட்டத்தினர் இடையே பேசிய அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து, தான் தூத்துக்குடி தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

“சட்டமன்ற தேர்தலில் பாஜகவை ஆதரித்து தீவிர பிரச்சாரம்” – பவர்ஸ்டார் சீனிவாசன் பேச்சு

அதேபோல் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் கூறினார். மேலும், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்ற சீனிவாசன், பின்னர் அவர்களின் வெற்றி விழாவிலும் தான் பங்கேற்பதாக தெரிவித்தார். இந்த பொங்கல் விழாவில், திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட கட்சியினரும், கிராமமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.