Home தமிழகம் 'கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விபச்சார விடுதி என்று பதிவிடுவதா?' கி.வீரமணி கடும் கண்டனம்

‘கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விபச்சார விடுதி என்று பதிவிடுவதா?’ கி.வீரமணி கடும் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகம் சென்னை தியாகராய நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அவதூறு செய்வதிருக்கிறார் ஒருவர். அதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

'கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விபச்சார விடுதி என்று பதிவிடுவதா?' கி.வீரமணி கடும் கண்டனம்

‘குஜிலியம்பாறை ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நடத்திவந்த முகநூல் பக்கம் “கம்யூனிசம் வென்றே தீரும்… மார்க்சிய வழியில்…” என்பதாகும். இதில் மெல்ல மெல்ல புகுந்துவந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் தங்கள் காவி, கழிசடைப் பதிவுகளை அந்தக் குழுவில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர். இந்தப் பிரச்சினை கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்துள்ளது. அதில்தான் பாலன் இல்லம் படத்தைப் போட்டு, அதை விபச்சார விடுதி என்று பதிவிட்டும், இடதுசாரி சிந்தனையாளரும், பெண்ணுரிமைச் செயல்பாட்டாளருமான தோழர் ஒருவரின் படத்தைப் போட்டு, அவதூறாகவும் பதிவிட்டுள்ளனர்.

'கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விபச்சார விடுதி என்று பதிவிடுவதா?' கி.வீரமணி கடும் கண்டனம்

திராவிடர் கழகத்தின் அறிக்கையில், ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள தகவலும், நடப்புகளும் அதிர்ச்சிக்குரியன.

ஆட்சி அதிகாரம் தங்களுக்கு அரவணைப்பாக இருக்கும் ஒரே காரணத்தால், எந்த எல்லைக்கும் சென்று வெறியாட்டம் போடலாம், கொச்சைப்படுத்தலாம் என்ற போக்கில் மதவாத சக்திகள் கண்மூடித்தனமாக ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு தோழர் முத்தரசன் அவர்களின் அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ள நிகழ்வும், அதற்கு எதிரான போராட்டமும், அறிவிப்புமே சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஏன் இதுவரை கைது செய்யவில்லை?

இதுகுறித்து 17 ஆம் தேதி புகார் கொடுக்கப்பட்டதற்கு காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்னணி என்ன? இந்தப் போக்கு நீடித்தால் நாடே ஒழுங்கு மீறல் என்ற போக்கைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதா?
மாநில அரசு, மத்திய அரசின் கண்ஜாடைக்குக் காத்திருப்பதுபோல பல விடயங்களிலும் செயல்பட்டு வருவது நல்ல அறிகுறியல்ல! சட்டமும், விதிமுறைகளும் எல்லோருக்கும் பொதுவானது என்பது நினைவில் இருக்கட்டும்.

சோசியல் மீடியா மேனேஜர்

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகமும் பங்கேற்கும் முத்தரசன் அவர்கள் அறிக்கை – போராட்டம் என்பது கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் சார்ந்ததல்ல – பொது ஒழுக்கத்தை, நியதியை விரும்பும் அனைவருக்குமான போராட்டமாக இதனைக் கருதவேண்டும்.

இந்தப் போராட்டத்தை திராவிடர் கழகம் வரவேற்கிறது. 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில், அவர்கள் எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களோ அங்கெல்லாம் ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியுடன் அறவழிபட்டு ஈடுபடுமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

'கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விபச்சார விடுதி என்று பதிவிடுவதா?' கி.வீரமணி கடும் கண்டனம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...

சமோசா திடீர் விலை உயர்வால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

திடீரென சமோசா விலை உயர்ந்ததால் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம்...

நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisment -
TopTamilNews