சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம்- இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம்

 

சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம்- இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம்

Institute of chartered accountants of India, ICAI எனப்படும் சிஏ கழகத்தின் 2020 ஆண்டிற்கான தேர்வுகள் மே 2 முதல் மே 18 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு அரசுத் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன. அந்தவகையில் ICAI CA 2020 தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மே மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள், ஜூன் 19 முதல் ஜூலை 4 வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வகுப்புகளுக்கான தேர்வுகள், இறுதி நிலை II தேர்வோடு இணைந்து நடத்தப்படுகிறது. அதாவது, ஜூன் 27,29, ஜூலை 1.3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூன் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நடக்க வாய்ப்பே இல்லை.

சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம்- இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம்

இந்நிலையில் சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம் என இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூலை மாத தேர்வில் இருந்து விலகினால் தேர்வுக் கட்டணம் அடுத்த தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.