சீனாவுக்கு பதிலடி கொடுங்க.. எதிர்க்கட்சிகளுக்கு அல்ல…. மோடி அரசுக்கு சிவ சேனா எச்சரிக்கை

 

சீனாவுக்கு பதிலடி கொடுங்க.. எதிர்க்கட்சிகளுக்கு அல்ல…. மோடி அரசுக்கு சிவ சேனா எச்சரிக்கை

எல்லையில் சீனாவுடனான மோதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அரசை காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது. அதேசமயம் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன தூதரகம் நன்கொடை கொடுத்த விவகாரத்தை எழுப்பி காங்கிரசுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, லடாக்கில் ஊடுருவிய மற்றும் இந்திய வீரர்களை கொன்றதற்கு சீனாவுக்கு சரியான பதிலடி கொடுங்க என மோடி அரசுக்கு சிவ சேனாவின் பத்திரிகையான சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு பதிலடி கொடுங்க.. எதிர்க்கட்சிகளுக்கு அல்ல…. மோடி அரசுக்கு சிவ சேனா எச்சரிக்கை

சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சீன துருப்புகள் கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவி, அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை மேற்கொண்டு வருகிறது. சீனாவுக்கு பொருத்தமான பதிலடி கொடுப்பதற்கு பதிலாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அரசு வலுவான பதில் அளிக்கிறது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீனாவிடமிருந்து பணம் பெற்றது. அதற்கு பதிலடியாக, பி.எம். கேர்ஸ் சீன நிறுவனங்களிடமிருந்து பல கோடி ரூபாய் பெற்றது என காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க. காங்கிரஸ் இங்கு மோதும் வேளையில், எல்லையில் சீனா பதுங்குகுழிகள் மற்றும் கூடாரங்களை அமைக்கிறது. நாம் சீனாவுடன் போராட வேண்டும் என்பதை மறந்து விட்டதாக தெரிகிறது.

சீனாவுக்கு பதிலடி கொடுங்க.. எதிர்க்கட்சிகளுக்கு அல்ல…. மோடி அரசுக்கு சிவ சேனா எச்சரிக்கை

அரசியலில் ஈடுபடுவது யார்? ராகுல் காந்தியின் கேள்விகள் வெறும் தண்ணீரில் உள்ள வெறும் குமிழ்கள் அல்ல. ஏற்கனவே சரத் பவாரும் இதே கேள்விகள் கேட்டார். சீனா நம் நிலத்தில் ஊடுருவவில்லை என்றால், 20 வீரர்கள் ஏன் வீரமரணம் அடைந்தனர்? அமித் ஷாவுக்கு வாழ்த்துக்கள். அவர் இரண்டு போர்களிலும் (கொரோன வைரஸ், எல்லை பிரச்சினை) கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சி மீது அரசாங்கம் கவனம் செலுத்த கூடாது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளால் சலசலக்க வேண்டிய அவசியமில்லை. 1962ல் நடந்தது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த காலத்தை நாம் மறந்து விட்டு புதிய பிரச்சினையை சமாளிப்போம். நேரு அல்லது மோடியாக இருந்தாலும் சீனா ஒரு போதும் மாறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.