இன்ஸ்டாகிராமில் வந்த டாக்டர் – மனம் திறந்த பெண்-80 லட்சம் ஏமாந்த கதை

 

இன்ஸ்டாகிராமில் வந்த டாக்டர் – மனம் திறந்த பெண்-80 லட்சம் ஏமாந்த கதை

ஒரு பெண்ணை ஊடகம் மூலமாக நூதன முறையில் ஏமாற்றி ஒருடாக்டர் 80 லட்ச ரூபாய் பணத்தை ஆட்டைய போட்டுள்ளார்

இன்ஸ்டாகிராமில் வந்த டாக்டர் – மனம் திறந்த பெண்-80 லட்சம் ஏமாந்த கதை

பெங்களூருவில் பனஷங்கரி பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற 50 வயதான பெண் எந்நேரமும் இன்ஸ்டாகிராமில் ஆண்களுடன் அரட்டையடிப்பார் அவர் பெரிய கோடீஸ்வரி .பல கோடி சொத்துக்கு அதிபதி .அவரின் கணவர் எதையும் கண்டுகொள்ள மாட்டார் ,இந்நிலையில் அந்த பெண்ணுக்கு லண்டனை சேர்ந்த டாக்டர் என்று கூறி ஒருவர் நட்பு கொண்டு பேசி வந்தார் .அப்போது அந்த டாக்டரிடம் அந்த பெண் பல மருத்துவ ஆலோசனைகளை கூறி வந்தார் .அதனால் அந்த பெண்ணுக்கு அவர் மீது முழு நம்பிக்கை வந்தது .அதன் பிறகு அந்த டாக்டர் அந்த பெண்ணுக்கு ஒரு விலையுயர்ந்த பார்சல் அனுப்பியுள்ளதாகவும் அதை டூட்டி கட்டி பெற்றுகொள்ளுமாறு கூறினார் .

பின்னர் சில நாள் கழித்து அந்த பெண்ணுக்கு சுங்கத்துறை மற்றும் நிதி துறை அதிகாரிகள் என்று கூறி பலர் பேசினார்கள் .இன்னும் நிதி அமைச்சர் ஆபிசிலிருந்து பேசுவதாக கூறியும் பேசி அவர்க்கு ஒரு பார்சல்  இறுப்பதாகவும் அதற்கு வரியாக  80 லட்ச ரூபாய் கட்டவில்லையென்றால் கைது செய்வோம் என்று மிரட்டினார்கள் .அதனால் பயந்து போன அந்த பெண் அவர்கள் சொன்ன  அக்கௌண்டுக்கு பல தவணைகளில் 80 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பினார் .அதன் பிறகு அவர்க்கு எந்த பார்சலும் வரவில்லை  .இதனால் அந்த பெண் ஏமாற்றபட்டதையுணர்ந்து போலீசில் புகார் தந்தார்  .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்துவருகிறார்கள்.