நீளும் நொடிகள்… ரீல்ஸில் மாஸ் அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம் – துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்!

 

நீளும் நொடிகள்… ரீல்ஸில் மாஸ் அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம் – துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்!

புதிய பயனர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கவும் பழைய பயனர்களை வெளியேறாமல் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றன. அந்த அம்சங்கள் உங்களுக்கு மிகச்சிறிய அளவில் இருக்கலாம். ஆனால் பயனர்களின் மனநிலையைப் பொறுத்து அதன் முக்கியவத்துவம் மாறும். அதுதான் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா என பல சோசியல் மீடியாக்களின் பலம். உதாரணமாக பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் மட்டுமல்லாமல் ஸ்டோரி வைக்கும் ஆப்சனும் இருக்கிறது.

நீளும் நொடிகள்… ரீல்ஸில் மாஸ் அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம் – துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்!

ஒருவர் ஸ்டோரி மட்டுமே வைக்கலாம். மற்றொருவர் ஸ்டேட்டஸ் வைக்கலாம். அல்லது இரண்டையுமே சேர்த்து வைப்பவராக இருக்கலாம். இந்த ஸ்டோரி ஆப்சனை முதலில் கொண்டுவந்தது ஸ்னாப்சாட் தான். அதற்குப் பிறகு வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியது. அப்படியே பேஸ்புக், இன்ஸ்டா என ஒவ்வொரு நிறுவனங்களும் புதுப்புது பெயர்களில் ஸ்டோரி ஆப்சனை அறிமுகப்படுத்தின. டிக்டாக் வருவதற்கு முன்னர் இந்த ஸ்டோரி ஆப்சன்கள் பிரபலமாகவில்லை. ஆனால் டிக்டாக் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பிறகு அதற்கு மாற்றாக இன்ஸ்டா ரீல்ஸ் (Reels) டிக்டாக் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது.

நீளும் நொடிகள்… ரீல்ஸில் மாஸ் அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம் – துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்!

இந்த இன்ஸ்டா ரீல்ஸில் 30 நொடிகள் மட்டுமே வீடியோக்கள் செய்ய முடியும். பலரும் தங்களுக்குப் பிடித்த பாடல்கள், வீடியோ காட்சிகளைப் பதிவிட்டனர். இன்னும் சிலர் தங்களது நடிப்புத் திறமைகளைக் காட்டுவதற்காக இந்த ரீல்ஸ் ஆப்சனை உபயோகப்படுத்தினார்கள். பிரபல நடிகர், நடிகைகளின் குட்புக்கில் இன்ஸ்டா ரீல்ஸ் இடம்பிடித்தது. சக்கை போடு போட்ட இன்ஸ்டா ரீல்ஸில் ஒரேயொரு குறை மட்டும் தான் இருந்தது. அது 30 நொடிகள் மட்டுமே வீடியோக்களைப் பதிவேற்ற முடியும். தற்போது அதையும் தீர்த்துவைத்துள்ளது இன்ஸ்டா. ஆம் இந்த வீடியோ நீளத்தை 1 நிமிடமாக உயர்த்தியுள்ளது. இது ரீல்ஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.